குமரி பகவதியம்மன் கோவிலில் உண்டியல்கள் எண்ணப்பட்டன

60பார்த்தது
உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள்  வைத்துள்ளனர். இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு பிறகு இன்று (10-ம் தேதி) திறந்து எண்ணப்பட்டது.
     
குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் தங்கம், முன்னிலையில்,   ஆய்வாளர் சரஸ்வதி, கோவில் மேலாளர் ஆனந்த், மேற்பார்வையில் கோவில்  பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆதி பராசக்தி மன்றத்தினர், மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்க பணமாக ரூ. 20 லட்சத்து  ஆயிரத்து 307, தங்கம் 5. 420 கிராம், வெள்ளி 323 கிராம் ஆகியவை வசூலாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி