குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் மீனமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று (செப்.,19) நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில்: தோவாளை ஒன்றியம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 15-ந் தேதியன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினார் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது தனிப்படை போலீசார் சிலர் அப்பாவி வாலிபர்களின் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீனமங்களம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை நேற்று பிடித்து விசாரணை அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தார்கள். இதனால் அப்பகுதி சார்ந்த இளைஞர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பணி முடிந்து வீட்டுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். விசாரணை என்ற பெயரில் வழக்கில் தொடர்பு இல்லாத அப்பாவி இளைஞர்களை அழைத்துச் செல்வதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.