நடிகர் விஜய் நடித்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் திரைப்படம் இன்று (செப்.,5) வெளியாகி உள்ள நிலையில், திரைப்படத்தை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தி கோட் படத்திற்கு புது விதமான ப்ரோமோஷன் செய்தனர்.
கன்னியாகுமரி வாவதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய நாட்டுப் படகு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோட் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி கடலில் மீன் பிடிக்க செல்ல வழி அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமை தாங்கினார். புதுவிதமாக படகில் பட பிரமோஷன் செய்த கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல் அப்பகுதி மீனவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.