புரட்டாசி முதல் சனிகிழமை; பெருமாள் கோவிலில்களில் அபிஷேகம்

64பார்த்தது
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக சொல்லப்படுகிறது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இதன் காரணமாக புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
      அந்த வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று (21-ம் தேதி)  குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடந்தது. இந்த பூஜைகளில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

       இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள  பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலான வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று  அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. அதன்பிறகு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. முன்னதாக பெருமாளை தரிசிப்பதற்காக ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி