திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்ல விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல, விசிகவுக்கு 2 எம்பிக்கள், 4 எம்எல்ஏக்கள் இருப்பது திமுக உடனான கூட்டணியால்தான் என விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் எம்பியுமான ரவிக்குமார் கூறியுள்ளார். மேலும் அவர், "விசிக இல்லையென்றால் வடமாவட்டங்களில் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, அரசியல் முதிர்ச்சியற்றது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.