ஓண பண்டிகை விழா- விஜய் வசந்த் எம். பி பரிசுகள் வழங்கினார்

58பார்த்தது
தக்கலை அடுத்த மேலமுத்தலகுறிச்சி இணையும் இளைஞர் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் 20-வது ஆண்டு ஓண விழா மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் இலவச மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உட்பட ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றது.

நிறைவு நாளான நேற்று (16-ம் தேதி) பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்: - இன்று வேகமான உலகத்தில் எல்லா கேள்விகளுக்கும் மொபைல் போனில் பதில்கள் உள்ளது. நமது கேள்வி என்னவென்றால் மொபைல் போன் மட்டுமா உலகம் என்பது தான். அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளது. நாம் பிள்ளைகளிடம் தலைவர்களைப் பற்றி நாட்டின் வரலாற்றை பற்றி எடுத்துக் கூற வேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர்கள் நேரத்தை செலவிடுங்கள்.

தற்போது வீடுகளில் பிற மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. ஆனால் நாம் வீடுகளில் தமிழை பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முத்தலகுறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன் மற்றும் தக்கலை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி