திருவட்டாறு அருகே போனஸ் கேட்டு முந்திரி ஆலை முற்றுகை

63பார்த்தது
திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பகுதியில் முந்திரி ஆலை ஒன்று சுமார் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனை கடந்த மூன்று ஆண்டுகளாக பாகோடு பகுதியை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இதில் 40 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.

     இந்த ஆலய நடத்தியவர்கள் தொழில் நஷ்டம் காரணமாக கடந்த ஆறு மாதமாக மூடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று (13-ம் தேதி)  முந்திரி ஆலை நிர்வாகிகள் அங்கு வந்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும், அதில் வேலை செய்த தொழிலாளர்கள் அங்கு சென்று தங்களுக்கு தரவேண்டிய போனஸ் தொகையை தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

     அதற்கு அவர்கள் முறையான பதில் கூறாததால் தொழிலாளர்கள் முந்திரி ஆலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.   இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ்,   திருவட்டார் பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      தகவல் அறிந்து அங்கு சென்ற திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் மற்றும் திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் ரமேஷ் ஆகியோர் ஆலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று (14 ஆம் தேதி) அனைவருக்கும் போனஸ் வழங்குவதாக ஆலை நிர்வாகம் தரப்பில் உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி