ஈரான் அரசின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு!
ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மனநல சிகிச்சை மையம் திறக்கும் திட்டத்தை ஈரான் அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. எனினும் 'இது மனித உரிமை மீறல்' என இந்த அறிவிப்புக்கு எதிராக பலரும் கொந்தளித்து வருகின்றனர்.