நேபாளம் நாட்டின் முன்னாள் டி. ஜி. பி. யும், அரசு ஆலோசகருமான சைலேந்திர கானல் குடும்பத்துடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார் அவருக்கு சுற்றுலாத்துறையினர் வரவேற்பு.
புராதன சின்னங்களை சுற்றி பார்தது ரசித்தார்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு நேபாளம் நாட்டின் முன்னாள் போலீஸ் டி. ஜி. பி. யும், தற்போதைய நேபாளம் நாட்டு அரசு ஆலோசகருமான சைலேந்திர கானல் இன்று மாலை மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். அவரை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு அருகில் தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ். சக்திவேல் வரவேற்றார். பிறகு அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து அவர் ரசித்தார். அப்போது மாமல்லபுரம் சுற்றுலாத்துறையின் வழிகாட்டி ஒருவர் புராதன சின்னங்களின் வரலாற்று தகவல்கள் குறித்து விளக்கி கூறினார். பிறகு அவர் புராதன சின்னங்கள் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து ரசித்தார்.