செங்கல்பட்டு மாவட்டம்
புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவராக காதர் உசேன் மற்றும் துணை தலைவராக கிங் உசேனும் பதவி வகித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை தலைவர் கிங் உசேன் புதுப்பட்டினம் பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பக்கீர் முகமது என்பவரை இடைக்கால வணிகர் சங்க தலைவராக வியாபாரிகள் அல்லாதவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு தன்னிச்சையாக தேர்ந்தெடுத்து பல அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வியாபாரிகளின் ஆலோசனையோடு சங்க தேர்தல் நடத்த முடிவு செய்து இன்று அதற்கான தேர்தல் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் காதர் உசேனுக்கு எண் 1 சின்னமும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சலாவுதீன் என்பவருக்கு எண் 2 சின்னமும் ஒதுக்கப்பட்டு இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர். இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவான நிலையில் எதிரணியை சேர்ந்த பக்கீர் முகமது தனது ஆதரவாளர்களுடன் வாக்கு பதிவு நடைபெற்ற திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.