அமெரிக்காவின் மியாமி நகருக்கு வந்துக் கொண்டிருந்த SAS SK957 விமானம் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பின் மீது வந்தபோது மோசமான வானிலை காரணமாகக் கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாகப் பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்து மேல் நோக்கி தூக்கி வீசப்பட்டனர். பல மணி நேரங்களாக டர்புலன்ஸ் நீடித்ததால், பயணத்தைத் தொடரமுடியாமல் விமானம் மீண்டும் ஐரோப்பாவுக்கே திரும்பியுள்ளது. நல்வாய்ப்பாக பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.