செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா துவக்கம்

62பார்த்தது
செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா தொடக்க விழா- ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்பு.!!

சுற்றுச்சூழலை பற்றி வில்லுப்பாட்டு பாடி அசத்திய பள்ளி மாணவி.!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் கலை திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்க விழா செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு கலைத் திருவிழாவை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலைத் திருவிழாவில் பங்கேற்றனர்

குறிப்பாக தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு ஓவியம் கட்டுரை போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி