கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன். ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டேன். கடந்த முறை தேர்தலின்போது கொஞ்சம் ஏமாந்து விட்டேன். ஆனால், இந்த முறை அப்படி நடக்கவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.