புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் இதுவரை காணப்படாத புதிய வகை யூரேசிய நீர்நாய் மீட்கப்பட்டது. இந்தியாவில் 3 வகை நீர்நாய்கள் உள்ள நிலையில் இந்த வகை அரிதாகவே காணப்படுகிறது. இமயமலை அடிவாரங்கள், வடகிழக்குப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகிய சில பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. நீர் மற்றும் வாழ்விடம் மாசுபாடு காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றன. எப்போதும் தனித்தே காணப்படும் இவை, இரவு நேரங்களில் மட்டுமே இயங்கும்.