மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. மேலும் ரத்த அழுத்தமும் அதிகமாகி, மூளைக்குப் பாயும் ரத்த ஓட்டமும் அதிகமாகிறது. இத்தகைய சமயங்களில் கொழுப்புச்சத்து மிக்க உணவை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். ரத்த ஓட்டம் 1% பாதிக்கப்பட்டால் கூட, இதய நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு 13% அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள், கோகோ, பெர்ரி போன்ற உணவுகளைச் சாப்பிடும் பொழுது இந்தப் பிரச்சனை ஏற்படுவதில்லை.