மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் மீனவர் பகுதியில் 75 வயதுடைய சித்திரைவள்ளி எனும் மூதாட்டியை பாலியல் வன்புணர்வு முயற்சி செய்த அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் நாகாத்தம்மன் கோயில் தெரு மீனவர் பகுதியில் வசிப்பவர் ரங்கநாதன் மனைவி சித்திரை வள்ளி வயது 75 இவர் நேற்று மாலை வீட்டில் இருக்கும் போது அதே மீனவர் குப்பத்தை சேர்ந்த கருணாகரன் மகன் ஜெயக்குமார் வயது 40 இவர் மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வன்புணர்வு முயற்சி செய்து உள்ளார் அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மூதாட்டியின் மருமகள் வள்ளி குடிபோதையில் இருந்த ஜெயக்குமாரை அடித்து துரத்தி உள்ளார் இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஜெயக்குமார் மீது பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்புணர்வு முயற்சி என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில் மாமல்லபுரம் அருகே தேவநேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஜெயக்குமாரை பிடித்து கைது செய்து திருப்போரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.