18 வருடம் சபரிமலை யாத்திரைக்கு சென்று வந்தவர்கள் 'குருசாமி' என்கிற தகுதியைப் பெறுகிறார்கள். குருசாமிகள், அடுத்த வருடம் முதல், மற்ற பக்தர்களுக்கு தன் கையால் மாலை அணிவிக்கலாம். ஒருமுறை சபரிமலை சென்று, அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, ஐயனை தரிசித்தாலே கோடி புண்ணியம் என கிடைக்கும் என்றால், 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்களுக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.