இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த வாலிபரை தட்டி தூக்கிய செங்கல்பட்டு காவல் துறை.!!
செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் அருகே cheapest and salon என்ற பெயரில் முடி திருத்தம் மற்றும் ஸ்பா இயங்கி வருகிறது. இங்கு அதிக அளவிலான ஆண்கள் வந்து செல்வதாகவும் அதேபோல் தினந்தோறும் காலை வேளையில் பெண்கள் வருவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக சோதனை செய்ததில் அங்கு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது உறுதியானது இந்த நிலையில் கடை உரிமையாளரான மறைமலைநகர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் வயது 32 என்பவர் மற்றும் அதில் வேலை செய்த பெண் என இருவரை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்
பின்பு சதீஷ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் அங்கு பணிபுரிந்த பெண்ணை காப்பகத்தில் அடைத்தனர்.!!