செங்கல்பட்டில் அரசு ஊழியர் மீது மாவட்ட ஆட்சியரிடம் மனு

51பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தேரி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த சுமார் மூன்று சென்ட் கிராம நத்தம் வகையைச் சார்ந்த புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் அவருடைய பெயருக்கு பட்டா மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் ஊர் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த அரசு புறம்போக்கு நிலத்தை அதே பகுதியில் வசித்து வரும் அரசு ஊழியரான சுரேஷ் ராஜா என்பவர் இலவச வீட்டு மனை பட்டா என்கிற பெயரில் மோசடியாக பெயர் மாற்றம் செய்து உள்ளதாகவும், அந்த இடத்தில் ஏற்கனவே சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தின் திருத்தேரை கால காலமாக நிறுத்தி வருவதாகவும், அங்கு கிராம பஞ்சாயத்தின் தொலைக்காட்சி பெட்டி அறை, திருவள்ளுவர் நூலகம் நடைபெற்று வந்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் கணக்காளராக பணியாற்றி வரும் சுரேஷ் ராஜா மோசடியாக அரசை ஏமாற்றி இலவச வீட்டு மனை பட்டா பெற்றுள்ளதாகவும், அந்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி