முன்னாள் உலக சாம்பியன் மைக் டைசன் தனது 58வது வயதில் மீண்டும் குத்து சண்டையில் களமிறங்குகிறார் என அறிவித்ததுமே எதிர்பார்ப்பு எழுந்தது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் 31 வயது பிரபல யூடியூபரான குத்துசண்டை வீரர் ஜாக்பால் இன்று (நவ 15) டைசனை எதிர்த்து களமிறங்குகிறார். இந்நிலையில், போட்டியின் அறிமுக விழாவில் சக போட்டியாளரான ஜாக்கை மைக் டைசன் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த போட்டியானது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்படுகிறது.