18 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் அட்டை பெற, சிறப்பு முகாம்கள் நாளையும் (நவ.16) நாளை மறுநாளும் (நவ.17) நடைபெறவிருக்கின்றன.அருகில் உள்ள வாக்காளர் சிறப்பு முகாம்களில் படிவம் 6-ஐ நிரப்பிக் கொடுக்க வேண்டும். படிவங்கள் சரிபார்க்கப்பட்டு தபாலில் அட்டை வீட்டுக்கு அனுப்பப்படும். இறந்தவர்கள் அல்லது பட்டியலில் இருந்து பெயர் நீக்க விரும்புபவர்கள் படிவம் 7-யும், தொகுதி மாற்றம் செய்ய விரும்புவர்கள் படிவம் 8-ம் அளிக்க வேண்டும்.