90 கி.மீ வேகத்தில் புழுதி பறக்கச் சென்ற ரயில் (Video)
ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு இன்று (நவ. 07) சோதனை நடைபெற்றது. தொடர்ந்து தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளதா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணிகள் நவ. 13ம் தேதி தொடங்க இருப்பதாகவும், 20ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நன்றி: சன் நியூஸ்