நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மை காலமாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் கட்சியின் தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விலகி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி என்பவர் விலகியுள்ளார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னை திரு.வி.க சட்டமன்ற தொகுதியில் போட்டிட்டு 10,921 வாக்குகளை பெற்றார்.