அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (நவ. 7) கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தொண்டர்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணசாமி மற்றும் கட்சி தொண்டர்களை கைது செய்தனர்.