தமிழ்நாட்டில் நல்லாட்சி பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக நல்லாட்சியை வழங்குவதால்தான் அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள். நாட்டில் இறையாண்மை, மதச்சார்பின்மையை காப்பதே திமுக கூட்டணியின் முக்கிய கொள்கையாகும். இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்பு கூட்டணி என்பதால் அதை பிளவுப்படுத்த முயற்சி செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.