கடலூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு நேற்று (நவ. 06) வந்து மது அருந்திய நபர் ஒருவர் தலைக்கேறிய போதையில் தான் வாங்கி குடித்த மது உடலுக்கு கேடு விளைவித்துவிடும் என அச்சப்பட்டு ஆதங்கத்தோடு புலம்பி தள்ளினார். மதுவில் பச்சை நிறத்தில் இருக்க வேண்டிய அடையாளம் இல்லை எனவும் இது போலியான சரக்கு என்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.