மயிலாடுதுறை கொருக்கை பகுதியில் தீபாவளி அன்று மூன்று இளைஞர்கள் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த இளைஞர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு பலர் ஒன்று கூடி, தட்டிக்கேட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தாரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து புகார் அளித்தும், போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் கூறுகிறார்.