ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கங்காரு எலிகள் தங்களது வாழ்நாளில் தண்ணீரே குடிப்பது கிடையாது. வட அமெரிக்காவைச் சேர்ந்த இந்த வகை எலிகள், பாலைவனப் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. இவை தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை தாங்கள் உண்ணும் விதைகளில் இருந்து பெறுகின்றன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, இந்த எலிகளின் செரிமான அமைப்பு சரியாக செயல்படுவதற்கு தண்ணீர் அவசியமில்லை. எனவே இவை தண்ணீர் குடிக்காமலேயே உயிர்வாழும் தன்மை கொண்டது.