பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகவில்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 5000க்கும் அதிகமான மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன. 5000 காலி பணியிடங்கள் உள்ளதால் மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்க சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.