திருப்போரூரில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
திருப்போரூரில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள் மொழியை விமர்சித்த கடலூர் விசிக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை விமர்சித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது 300 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் பங்கேற்று திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து வன்னியர் சங்க கொடியை கையில் ஏந்தி கண்டன கோஷம் எழுப்பி பேரணியாக சென்றவர்கள் காவல் நிலையம் சென்று அவதூறாக பேசிய விசிக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் மனுவினை வழங்கினர் ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி