செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரத்திற்கு ஏராளமானவர்கள் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்தனர். பலர் மோட்டார் சைக்கிளில் இ. சி. ஆர். சாலையில் நகருக்குள் நுழையும் போது மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை மடக்கி பிடித்தனர். பிடிப்பட்ட 18 இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் எதுவும் போலீசார் விதிக்கவில்லை. மாறாக 18 வாலிபர்களும் பனிஷ்மென்ட் -ஆக மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் போல் அவர்களை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம வரிசையாக நிற்க வைத்தார். பிறகு மாமல்லபுரம் ட்ராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஒரு பள்ளி ஆசிரியர் போல் மாறி சாலை விபத்துகள் எப்படி ஏற்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு ஏற்படும் அவலம், அதனால் அவர்கள் குடும்பத்தினர் படும் இன்னல்கள், விபத்துகளால் விதவைகள், அவர்களின் குழந்தைகள் படும் அவலம், இ. சி. ஆர். சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.