பெங்களூருவில் இளம்பெண்ணிடம் சிறுவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி சிட்டி பகுதியில் வசிக்கும் நேகா என்ற பெண் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த சிறுவன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடினான் என தெரிவித்திருந்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு சிறுவனை தேடி வருகின்றனர்.