சென்னையை சேர்ந்த குரு குகன் (26) தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர். இவர் மீது போலீஸில் பெண்ணொருவர் அளித்த புகாரில், "ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் எங்களுக்குள் காதல் மலர்ந்தது, குரு மூலம் நான் கர்ப்பமானேன். கர்ப்பத்தை வற்புறுத்தி கலைக்க வைத்த அவர் என்னை மணக்க முடியாது என கூறி ஏமாற்றிவிட்டார்" என்றார். இதையடுத்து குரு மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.