சூனாம்பேட்டில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை விமர்சித்த கடலூர் விசிக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி சூனாம்பேடு காவல் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை விமர்சித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் மணப்பாக்கம் தே. சாந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் உட்பட பாமக நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் சூனாம்பேடு பஜார் பகுதியில் இருந்து வன்னியர் சங்க கொடியை கையில் ஏந்தி கண்டன கோஷம் எழுப்பி பேரணியாக சென்றனர். பின்பு காவல் நிலையம் சென்று அவதூறாக பேசிய விசிக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் இடம் சந்தித்து புகார் மனு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி