
எறையூர் பெரிய குளம் சீரமைப்பு பணி துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் ஊராட்சியில், தான்தோன்றி அம்மன் கோவில் அருகே பெரிய குளம் அமைந்துள்ளது. இக்குளம் அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. அப்பகுதி மக்கள் வீட்டு உபயோகித்திற்கும், குளிக்கவும் இந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் குளம் துார்ந்து போனதை அடுத்து, குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையத்து, சி. எஸ். ஆர். , எனும் சமூக பொறுப்பு நிதியில் குளம் சீரமைக்க முடிவெடுக்கப்பட்டு, குளத்தில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. கரை பலபடுத்தப்பட்டு, சிமென்ட் கல் நடைப்பாதை அமைக்கப்பட உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.