ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

காஞ்சியில் மேன்ஹோலில் வெளியேறி சாலையில் தேங்கும் கழிவுநீர்

காஞ்சியில் மேன்ஹோலில் வெளியேறி சாலையில் தேங்கும் கழிவுநீர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஜவஹர்லால் தெரு மற்றும் நெல்லுக்காரத் தெரு இணையும் இடத்தில், பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் மேன்ஹோல் உள்ளது. ஜவஹர்லால் தெரு என அழைக்கப்படும் கம்மாளத் தெரு பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து நின்று செல்கின்றன. இந்த நிறுத்தத்தில் இறங்கும் ஆந்திரா, கர்நாடகா பயணியர், காஞ்சி காமாட்சி அம்மன் மற்றும் ஆதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள மேன்ஹோலில், அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. முதலில், லேசான கசிவு மட்டுமே இருந்தது. தற்போது, கொப்பளித்து கழிவுநீர் சாலையில் வெளியேறும் வகையில் உள்ளது. அந்த சாலை வழியாகச் செல்லும் அரக்கோணம், காரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டிகள் கழிவுநீரில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காலரா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்கள் பரவும் அபாயம் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம், ஜவஹர்லால் தெரு, நெல்லுக்காரத் தெரு இணையும் இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ள மேன்ஹோல் அடைப்பை நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా