மதுராந்தகம்: ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய் துறை அதிகாரிகள்

70பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சத்யா என்பவர் கிராம சாலையில் ஆக்கிரமித்து வீட்டிற்கு முன்பு மதில் சுவர் அமைத்து சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தார். 

இந்நிலையில் மாரியம்மன் கோவில் கிராம சாலைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சிமெண்ட் சாலை போடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சாலையை கடந்த மூன்று ஆண்டுகளாக போடப்படாமல் கிடப்பில் போட்டிருந்தனர். இதற்கு காரணம் சாலையை ஆக்கிரமித்து மதில் சுவர் எழுப்பியிருந்ததால் சாலை போட முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த ஆக்கிரமிப்பு குறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தியதில் கிராம சாலையை ஆக்கிரமித்து மதில் சுவர் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதன் காரணமாக இன்று (பிப்ரவரி 06) வருவாய்த்துறையினர் மற்றும் மதுராந்தகம் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கிராம சாலை போட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி