மதுராந்தகம் நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்

56பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளடங்கியது. 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இன்று மாதாந்திர சாதாரண நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. பொது மக்களின் அடிப்படை வசதிகளான மின் விளக்கு, குடிநீர், கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசுவதற்காக கூட்டம் தொடங்கியது. 

ஆனால் மதுராந்தகம் நகராட்சி சார்பில் 24 வார்டுகளிலும் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை என திமுகவைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் மற்றும் நகராட்சி ஆணையரை கண்டித்தும், நிர்வாக சீர்கேடு கண்டித்தும், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் எட்டு பேர், அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் உட்பட 10 பேர் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நகர மன்ற வார்டு பகுதிகளில் எந்தவித பணிகளும் செய்து தராமலும், நகர மன்ற தலைவருடைய உறவினருக்கு அனைத்து ஒப்பந்த பணிகளும் வழங்குவதாகவும் கூறி கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டம் தொடங்கி 20 நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு சில திமுக உறுப்பினர்களும் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி