கிளாம்பாக்கத்தில் 109 கிலோ குட்கா பறிமுதல்..2 பேர் கைது

53பார்த்தது
கிளாம்பாக்கத்தில் 109 கிலோ குட்கா பறிமுதல்..2 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 109 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்த போது, காரணை புதுச்சேரி, கணபதி நகர் சந்திப்பில், ஒரு கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 

கடையில் சோதனை செய்த போலீசார், மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 109 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தவிர, குட்காவை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு கார், மூன்று மொபைல் போன் மற்றும் 53,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருள் செல்வன் (41), விஜி (36) என தெரிந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் (பிப்.21) அவர்களை ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி