ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் யானைகள் தாக்கியதில் 5 பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபுலவாரிப்பள்ளி மண்டலத்தில் உள்ள குண்டலகோனா கோயில் பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்தன. கோயிலுக்கு வந்த பக்தர்களை யானைகள் கூட்டம் தாக்கியதில் ஐந்து பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து யானைகள் வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டன. விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.