சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே 19-வயது இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வன், அவரது நண்பர் தயாளன் ஆகிய இருவரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இரண்டு பேரையும் செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.
24 மணி நேரத்திற்கும் மேலாக மகளிர் காவல் நிலையத்தை பூட்டி வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு குற்றவாளிகளை அழித்துவரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு சற்று நேரத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.