தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்வதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை புதன்கிழமையன்று கடலோர தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும்.