கொல்கத்தா அருகே வங்காள விரிகுடாவில் இன்று (பிப். 25) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6:10 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.