மாமல்லபுரம் பெருமாள் கோயிலில் நடிகர் சுவாமி தரிசனம்

78பார்த்தது
மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப் பெருமாள் கோயிலில் கருடபூஜை செய்து நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம். கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பாசிமணி விற்கும் நரிக்குறவப் பெண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்! செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயனப் பெருமாள் கோயில் 108 வைணவ திவ்யதிருத்தலங்களில் 63-வது ஸ்தலமாக விளங்குகிறது. இன்று தனது பிறந்தநாளான இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி-சட்டை அணிந்து மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப் பெருமாள் கோயிலுக்கு தனது மனைவியுடன் வந்தார். அங்குள்ள கருடாழ்வார் சன்னதியில் பஞ்சமியை முன்னிட்டு தனது மனைவியுடன் சிறப்புப் பூஜை செய்தார். பிறகு தலசயனப் பெருமாள், நிலமங்கைதாயார் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அங்கு வந்த, பாசிமணி விற்கும் நரிக்குறவப் பெண்களுடன் சிவகார்த்திகேயன் செல்பி எடுத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி