தமிழ் சீரியல் நடிகை ரேணுகா (30) என்பவரிடம் ஓடும் ரயிலில் நகைகள் திருடியது தொடர்பாக வசந்தகுமார் (33) என்ற காவலர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலாவிடம், ரேணுகா அளித்த வாக்குமூலத்தில், "மிகவும் சோர்வாக இருந்ததால், கைப்பையை தோளில் மாட்டியபடி துாங்கிய போது அவர் அதை திருடினார். இச்சம்பவத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்" என்றார். இதனிடையில் வசந்தகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.