முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்., 25) அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. 2025-26 ஆண்டுக்கான பொது, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மார்ச் 14, 15 தேதிகளில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த நடப்பு பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.