முகையூர் கிராமத்தில் பனைமரம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த முகையூர் கிராமத்தில் தமிழகம் முழுவதும் பனையேறி விவசாயிகளின் உரிமை மீறல்களைக் கண்டித்தும், கள்ளுக்கு விதித்த தடையை தமிழக அரசு நீக்க கோரியும், காவல்துறையினர் பனை விவசாயிகளின் சொத்துக்களான பனை மரத்தை சேதப்படுத்துவதும், அவர்களின் பானைகளை சேதப்படுத்துவதை, கண்டித்தும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூவத்தூர் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலை கிராமங்களான கூவத்தூர், கீழார்கொல்லை, கானத்தூர், வடபட்டினம், தென்பட்டினம், முகையூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பனை மரத்திலிருந்து சார் எடுப்பது, மற்றும் கள்இறக்குவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு கள் இயக்க தலைவர் சே. நல்லசாமி மற்றும் மாநில தலைவர் கே. வி. எஸ் சரவணன் மற்றும் மாநிலத் தலைவர் கண்ணன் ஆகியோரின் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் பனை ஏறி தொழிலாளர்கள், தமிழ்நாடு மரம் ஏறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம், பனையேறி தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம், கிராமணி நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு கல் எங்கள் உணவு, கள் இறக்குவது எங்கள் உரிமை என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி