கடலில் நீந்தி சாதனைபடைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரவேற்பு

72பார்த்தது
ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்தி சாதனை படைக்கவிருக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாமல்லபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக கின்னஸ் சாதனை முயற்சியாக ராமேஸ்வரம் மண்டபம் கடலில் இருந்து சென்னை மெரினா கடற்கரை வரை 604 கிலோமீட்டர் தூரம் நீந்தி உலக சாதனை முயற்சியாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் வேவ் ரைடர் குழுவும் இணைந்து அவர்களுக்கு முறையாக நீச்சல் பயிற்சி அளித்து கடந்த 5 ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையிலிருந்து துவங்கிய நீச்சல் உலக கின்னஸ் சாதனை முயற்சி வரும் 15 ஆம் தேதி மெரினா கடற்கரையில் முடிகிறது இந்நிலையில் சாதனையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சாதனையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி