கேளம்பாக்கத்தில் புதிய ரேஷன் கடையில் பொருட்களை வழங்கிய எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி.
செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், 2000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கேளம்பாக்கம்- கோவளம் சாலை, அரசு பள்ளி அருகே, 2022- 23 ம் ஆண்டில், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நியாய விலை கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த புதிய ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்ய துவக்க விழா ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் எம். எல். ஏ. எஸ் எஸ் பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல் இதயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு ரேஷன் கடையில் உணவு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர் அதனைத் தொடர்ந்து திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வேண்டுமென கோரிக்கையை ஏற்று ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டதுடன் மைதானத்தை ஒரு பகுதியாக பிரித்து மகளிர் மேல்நிலை பள்ளிக்கு வழங்க மைதானத்தை ஆய்வு செய்தனர்.