திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நத்தம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை 4 ஆம் வார வெள்ளிக்கிழமையான இன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது முன்னதாக அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அம்மனை கரகமாக பிரதிஷ்டை செய்து பம்பை உடுக்கை வாத்தியத்துடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்ற 200 க்கும் மேற்பட்டோர் ஓம் சக்தி பராசக்தி என்றும் கோவிந்தா. கோவிந்தா என்ற கோஷத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் இதில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏறாளமானோர் தீமிதி திருவிழாவை பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்களின் பாதுகாப்புக்காக சதுரங்கப்பட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் தீமிதி திருவிழாவை நத்தம் கிராம விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.